Saturday, August 8, 2009

பழுதான சிடியின் தகவல்களை மீட்க


நம்மிடம் சில முக்கியமான தகவல்களை-படங்களை -புகைப்படங்களை-
சி.டி.யில் பதித்து வைத்திருப்போம்.சில சமயம் நமது தவறுகளாலும்
தானாகவோ -சி.டி.யில் உள்ள தகவல்களை நாம் பெற முடியாமல்
போகலாம். அந்த மாதிரியான சமயங்களில் நமக்கு உதவவே இந்த
இலவச சாப்ட்வேர் பயன்படுகின்றது.

இந்த சாப்ட்வேரை பெற இங்கு கிளிக் செய்யவும்.குறைவான இடமே
இந்த சாப்ட்வேர் எடுத்துக்கொள்ளும்.இதை கணிணியில் நீங்கள்
இன்ஸ்டால் செய்ததும் இதை ஓப்பன் செய்தால் உங்களுக்கு
இந்த மாதிரியான விண்டோ ஓப்பன் ஆகும்.

1.jpg

இப்போது பழுதான சி.டி.யை சி.டி.டிரைவில் போடவும்.
அப்போது உங்களுக்கு இந்த விண்டோ ஓப்பன் ஆகும்.

2.jpg

இதில் உங்கள் சி.டி. டிரைவ் காட்டப்படும். மேலும் சி.டி.யின்
பெயரும் காண்பிக்கும்.அதன் கீழ் உள்ள பச்சை நிற நெக்ஸ்ட் பட்டனை
அழுத்துங்கள்.

3.jpg

இப்போது நீங்கள் எங்கு உங்கள் தகவல்களை சேமிக்க விரும்பு
கின்றீர்களோ அந்த இடத்தை தேர்வு செய்து Next பட்டனை அழுத்துங்கள்.
இப்போது உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

4.jpg

இதில் சிடியில் உள்ள குறிப்பிட்ட பகுதியையோ அல்லது மொத்த
சி.டி. தகவல்களை யோ சேமிக்க விரும்பினால் Check All கிளிக்
செய்யுங்கள்.அடுத்துள்ள Save பட்டனை கிளிக் செய்யுங்கள்.

5.jpg

உங்கள் சிடியில் உள்ள தகவல்களானது நீங்கள் குறிப்பிட்ட
இடத்தில் சேமிக்க தொடங்கும். கீழே உள்ள விண்டோவினை
பாருங்கள்.

6.jpg

அனைத்து தகவல்களும் பதிவானது Exit  செய்து வெளியேறுங்கள்.
மேற்கண்ட வழிமுறையில் நம்மிடம் உள்ள பழுதான சிடியில்
இருந்து தகவல்களை சுலபமாக மீட்டு எடுக்கலாம்.

:வேலன்:

1 comment:

  1. congrts first of all for ur blog...den dis above info is very useful but u plz ensure whether dat given dwnloaded link is virusfree and safe to use...???if so its excellent info....

    ReplyDelete